பொல்லா வாலொழிந்து , எல்லாம் குணமென;
தாவும் குணமொழிந்து, மேவும் மனமென;
சேட்டை மனமொழிந்து, கோட்டை தமிழென;
பிழைத் தமிழொழிந்து, மழை மேகமெனப்
பாடுமே காளமேகம் தாளது பற்றிய கவி.
( சிவபெருமானும் தென்னை மரமும் )
வளைகீற்றால், சாம்பல்மேல் பூச்சால், தாளுயர்ந்து
தலைவிரித் தாடுதலால், உச்சிகுளிர் புனலூறுதலால்
கன்றைப் பிள்ளையெனும் தனிச்சிறப்பால் ஈசனும்
ஒன்றே தென்னையு மாம்
*******
( சிவபெருமானும் தேங்காயும் )
தென்னாடெல்லாம் உள்ளமையால்,
தேன் காய்ப் பூஎல்லா மானமையால்,
காடு பெற்றமையால், நீரும் ஊறுமையால்,
ஒடும் கொண்டமையால், மாகணமும் உற்றமையால்
உரிக்கையில், பாதி நாரிருப்பமையால், காளை
வாகனத்தில் செல்லுதலால் - கர்ப்ப
கிரகமுள்ளும் மேவுதலால் - பக்தருக்
கிரண்டாய் பிளந்து சக்தியுடன் வெண்ணீரும்
அளிப்ப மையால் முக்கண்ணும் அமைந்ததனால்
தேங்காயும் சிவனேயென் றோது
*********
எலியோடு அண்ணன்; புலியோடு தம்பி;
ஞமலியோடு பைரவன்; கலியோடு காக்கை
பிடிக்காமல்தான் மயிலோடு ஒடினாயா? அழகா அம்
புலியோடு அப்பன் உளான் வா
*******
Monday, March 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment