சிதம்பரம் ஆறுமுகசாமியாரே! மாறுமுக சாமியாரே!!,
நிர்மலமான இதயத்தில் இருப்பான்! - ஈசன்
நிசப்தமான இமயத்தில் இருப்பான்!
சப்தமிட்டு கும்பலில்
சங்கரனையா தேடினீர் ?
சப்தமிட்டு கும்பலில்
சங்கரனையா தேடினீர் ?
உள்ளத்தில் கோவில் கட்டி
அவ்வன்பினால் சிவனைக் கட்டி
பூசலார் வாழ்ந்த இம்மண்ணில்
பூசலாறு ஒட விட்டீர் என்னில்
பூஜை செய்யப் போனீரா
பூசல் செய்யப் போனீரா
பூசலார் நாயனார் - மனதில்
பூசி புனைந்த அ(க)க்கோயிலை
மிஞ்சும் கோயில் வேறிலை - இதை
துஞ்சாத மனம் ஆரலை - என
அஞ்சி உணர்ந்தான் பல்லவன்
*அஞ்சியிட் டுறைத்தான் வல்லவன் - அவன்
நஞ்சு அருந்தியும் மீண்டவன்
தென்னாடு முழுதையும் கொண்டவன்;
சிதம்பரத்தில் நடமிடும் தாண்டவன் - அடியார்
இதயத்திலும் உறையும் ஆண்டவன்;
சிதம்பரத்தில் நடமிடும் தாண்டவன் - அவனே
அடியார் இதயத்திலும் உறையும் ஆண்டவன்;
அவனே கங்கை ஆறு முகமுள சாமி
அதனை அறியாரா ஆறுமுகசாமி?
இவ்வுண்மையை ஓதுவாரா ஆறுமுகசாமி?
உண்மையில் ஓதுவாரா ஆறுமுகசாமி?
சிவனுக்கோ பல்லவன் வினைந்த பெருங் கோயில் சிறிது;
சிவனடியார் பூசலார் புனைந்த மனக் கோவில் பெரிது.
சில அடியாரும் இதனை அறிவது அரிது;
செந்தமிழ் ஓதுவார்க்கோ இதுபுரிவது எளிது;
செந்தமிழ் ஓதுவார்க்கோ இதுபுரிவது எளிது;
உண்மையில் ஓதுவாரா ஆறுமுகசாமி?
அகத்தில் அடங்குபவன் - அவன் அகத்தில் அடங்குவதை விட்டு
புறத்தில் தேடி என்ன பயன்?
உள்ளத்தில் இருப்பவனை - ஜன
வெள்ளத்தில் தேடுவதென்ன திறன்?
உள்ளம் திருக்கோயிலென
உள்ளத்துள் உறைபவனை
உள்ளத்து உயர்வோடு
உள்ளத்தின்
உள்நோக்கி
உள்ளமதுருக
உள்ளத்தில்
உள்ளினால்
உள்ளொளி உண்டாக்கி
உள்ளத்தை ஆட்கொண்டு
உள்ளத்தின்
உள்ளுறைந்து
உள்ளத்தில் உய்வான் - உரைத்தேன்
உள்ளத்தில்
உள்ளது
உள்ளபடி - இதனை
உள்ளுவாரா ஆறுமுகசாமி?
கார்கில் ஜெய்
kargil_jay@gmail.com
*அஞ்சி = கூத்து , உ: குற + அஞ்சி
*ஆரலை = பாலைவனம்
Monday, March 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment