Sunday, March 30, 2008

சிவ பெருமான் & மகாவிஷ்ணு கவிதைகள்

(டிவி மெகா சீரியலும் மகாவிஷ்ணுவும்)

நினைவெல்லாம் நிறைவதனால், நிசப்தமாக காண்பதனால்
பொருளில்லாப் பொருளதனால், பொறுமையை சோதித்தலால்;
அந்தமில் லாததனால் அர்த்தமு மில்லாததனால்
அர்ச்சனையே நடப்பதனால்; அரிதாரம் மாறுதலால்
பார்ப்பார் பக்கத்திலேயே உளதால் - மெகாசீரியலும்
சமமே மகாவிஷ்ணு வுக்கே

அர்த்தமு மில்லாததனால் -- மகாவிஷ்ணு அத்வைதம்/ அர்த்த நாரி இரண்டும் அற்றவர். அவரே முழுமையானவர் என்பதும், மெகா சீரியலின் எந்த அர்த்தமும் இருக்காது என்பதும் பொருள்.

அரிதாரம் - represents 10 incarnations of Vishnu and in case of TV Seriel is represented by different actors changing roles.

பார்ப்பார் - means kovil gurukkal brahmins who has right to be close inside and in case of Mega seriels it is those audience.

/********** for those still not able to understand **************/

*1) Mega Serials never ever have any meaning; Lord vishnu is the great meaning that does not have material meaning and the sacred secret meaning is known to few.

*2) Mega Serials always have somone sliming on other; Archanai's are taking place in vishnu temple;

*3) This is special for 'pachchai' tamil people. Antham - means end. Mega Seriel practically has no end. Lord vishnu too

*4) Whoever watching mega Seriel, will never move away from TVset; In case of Lord Vishnu பார்ப்பார் - means kovil gurukkal brahmins who has right to be close inside.

/*********************************************************************/

Monday, March 24, 2008

காளமேகப் புலவர் - Inspiration

பொல்லா வாலொழிந்து , எல்லாம் குணமென;
தாவும் குணமொழிந்து, மேவும் மனமென;
சேட்டை மனமொழிந்து, கோட்டை தமிழென;
பிழைத் தமிழொழிந்து, மழை மேகமெனப்
பாடுமே காளமேகம் தாளது பற்றிய கவி.


( சிவபெருமானும் தென்னை மரமும் )

வளைகீற்றால், சாம்பல்மேல் பூச்சால், தாளுயர்ந்து
தலைவிரித் தாடுதலால், உச்சிகுளிர் புனலூறுதலால்
கன்றைப் பிள்ளையெனும் தனிச்சிறப்பால் ஈசனும்
ஒன்றே தென்னையு மாம்
*******
( சிவபெருமானும் தேங்காயும் )

தென்னாடெல்லாம் உள்ளமையால்,
தேன் காய்ப் பூஎல்லா மானமையால்,
காடு பெற்றமையால், நீரும் ஊறுமையால்,
ஒடும் கொண்டமையால், மாகணமும் உற்றமையால்
உரிக்கையில், பாதி நாரிருப்பமையால், காளை
வாகனத்தில் செல்லுதலால் - கர்ப்ப
கிரகமுள்ளும் மேவுதலால் - பக்தருக்
கிரண்டாய் பிளந்து சக்தியுடன் வெண்ணீரும்
அளிப்ப மையால் முக்கண்ணும் அமைந்ததனால்
தேங்காயும் சிவனேயென் றோது
*********
எலியோடு அண்ணன்; புலியோடு தம்பி;
ஞமலியோடு பைரவன்; கலியோடு காக்கை
பிடிக்காமல்தான் மயிலோடு ஒடினாயா? அழகா அம்
புலியோடு அப்பன் உளான் வா
*******

பூசலாரும் பூசல் ஆறும்

சிதம்பரம் ஆறுமுகசாமியாரே! மாறுமுக சாமியாரே!!,

நிர்மலமான இதயத்தில் இருப்பான்! - ஈசன்
நிசப்தமான இமயத்தில் இருப்பான்!

சப்தமிட்டு கும்பலில்
சங்கரனையா தேடினீர் ?

சப்தமிட்டு கும்பலில்
சங்கரனையா தேடினீர் ?

உள்ளத்தில் கோவில் கட்டி
அவ்வன்பினால் சிவனைக் கட்டி
பூசலார் வாழ்ந்த இம்மண்ணில்
பூசலாறு ஒட விட்டீர் என்னில்

பூஜை செய்யப் போனீரா
பூசல் செய்யப் போனீரா

பூசலார் நாயனார் - மனதில்
பூசி புனைந்த அ(க)க்கோயிலை
மிஞ்சும் கோயில் வேறிலை - இதை
துஞ்சாத மனம் ஆரலை - என

அஞ்சி உணர்ந்தான் பல்லவன்
*அஞ்சியிட் டுறைத்தான் வல்லவன் - அவன்

நஞ்சு அருந்தியும் மீண்டவன்
தென்னாடு முழுதையும் கொண்டவன்;
சிதம்பரத்தில் நடமிடும் தாண்டவன் - அடியார்
இதயத்திலும் உறையும் ஆண்டவன்;


சிதம்பரத்தில் நடமிடும் தாண்டவன் - அவனே
அடியார் இதயத்திலும் உறையும் ஆண்டவன்;
அவனே கங்கை ஆறு முகமுள சாமி
அதனை அறியாரா ஆறுமுகசாமி?


இவ்வுண்மையை ஓதுவாரா ஆறுமுகசாமி?
உண்மையில் ஓதுவாரா ஆறுமுகசாமி?
சிவனுக்கோ பல்லவன் வினைந்த பெருங் கோயில் சிறிது;
சிவனடியார் பூசலார் புனைந்த மனக் கோவில் பெரிது.
சில அடியாரும் இதனை அறிவது அரிது;
செந்தமிழ் ஓதுவார்க்கோ இதுபுரிவது எளிது;

செந்தமிழ் ஓதுவார்க்கோ இதுபுரிவது எளிது;
உண்மையில் ஓதுவாரா ஆறுமுகசாமி?

அகத்தில் அடங்குபவன் - அவன் அகத்தில் அடங்குவதை விட்டு
புறத்தில் தேடி என்ன பயன்?
உள்ளத்தில் இருப்பவனை - ஜன
வெள்ளத்தில் தேடுவதென்ன திறன்?


உள்ளம் திருக்கோயிலென
உள்ளத்துள் உறைபவனை
உள்ளத்து உயர்வோடு
உள்ளத்தின்
உள்நோக்கி
உள்ளமதுருக
உள்ளத்தில்
உள்ளினால்
உள்ளொளி உண்டாக்கி
உள்ளத்தை ஆட்கொண்டு
உள்ளத்தின்
உள்ளுறைந்து
உள்ளத்தில் உய்வான் - உரைத்தேன்
உள்ளத்தில்
உள்ளது
உள்ளபடி - இதனை
உள்ளுவாரா ஆறுமுகசாமி?

கார்கில் ஜெய்

kargil_jay@gmail.com

*அஞ்சி = கூத்து , உ: குற + அஞ்சி
*ஆரலை = பாலைவனம்